விமான பணியாளர்கள் டையப்பர்கள் அணியும் படி சீனா அறிவுறுத்தல்..!
சீனாவின் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் விமான பணியாளர்கள் டையப்பர்கள் அணியும் படியும், கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரொனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் டயப்பர் அணிய செய்யும் கெடுபிடி பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவுக்கு இத்தாலியிலிருந்து வந்த பெண் பயணி ஒருவர் தான் அணிந்திருந்த என்95 முக கவசத்தை அணியாத ஒரே இடம் கழிவறை தான் என்றும், கழிவறை சென்ற போதுதான் அவருக்கு தொற்று பரவியதாகவும் கூறப்படுகிறது.






