--- --:--:-- --

முகம் தெரியாவிட்டாலும், சேவைகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சாந்தி சோஷியல் சர்வீஸ்(SSS) சுப்பிரமணியம் மரணம்.முதல்வர் இரங்கல் !!!

7.3

கோவை மக்களுக்கு பரிச்சியமான சாந்தி சோசியல் சர்வீஸஸ்(SSS) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்.

 

கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும் சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம்(78).தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் 1972ம் ஆண்டு ஒரு லேத் இயந்தரத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு கியர் வீல்கள் தயாரிக்க ஆரம்பித்தார்.ஆரம்ப கால கட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்தவர் பின்னர் தொழிலை விரிவாக்கம் செய்த அவர் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியில் ஈடுபட்டார்.

 

இஸ்ரோ நிறுவனத்திற்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கபட்டன.கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாந்தி கியர்ஸ் விற்கபட்ட நிலையில்  பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி அந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார்.இந்த அமைப்பின் மூலம் லாப நோக்கமின்றி,சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை,மருந்தகம் போன்றவற்றை கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

மேலும்,சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.வெறும் 30 ரூபாயில் மதிய உணவு,குறைந்த விலையில் காலை சிற்றுண்டி என தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் வந்து
சென்ற வண்ணமாக காணப்படுவர்.

 

மேலும்,அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30, மருந்தகளில் 30% தள்ளுபடி, குறைந்த கட்டணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகள் உள்ள காரணத்தால் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும்.

 

அதே போல் சுப்ரமணியம் நடத்தி வரும் சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் ஸ்டாக் வரும் போது என்ன விலையோ அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படுவதால் அங்கும் வாகனத்திற்க்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவது வழக்கம்.இதன் எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் இலவச மின்மயானமும் செயல்பட்டு வருகின்றது.

 

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள கூடாது என ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.கடந்த ஒரு மாதத்திற்க்கு முன் 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார்.

 

அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியம் மறைவிற்கு அனுதாபங்களையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon