சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன், கடலோர காவல்படை ஏடிஜிபி சந்தீப் மிட்டல், உள்நாட்டு பாதுகாப்பு ஏடிஜிபி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் மேற்கொள்ளவேண்டிய தொடர் நடவடிக்கைகள் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்க மேற்கொள்ளவேண்டிய தொடர் நடவடிக்கைகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.







