ஐந்து பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. களை கட்டிய கூட்டம்..!
மதுரையில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உரங்கான பட்டியில் உணவகம் நடத்தி வரும் செல்வா என்பவர் ஐந்து பைசாவிற்கு முட்டையுடன் கூடிய பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து காலை முதல் சிறுவர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் காத்திருந்து 5 பைசாவை வாங்கிவிட்டு சிக்கன் பிரியாணியை பெற்று சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





