சென்னை – லக்னோ டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!
சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது.
டிக்கெட்டுகளை, CSK அணியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும், பேடிஎம் இன்சைடர் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.6,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






