--- --:--:-- --

“மறைமுகத் தேர்தலுக்கு தடையில்லை”- திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

3

மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

 

இந்த மறைமுகத் தேர்தலால், தனிப்பட்டு சுயேட்சையாக யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மறைமுகத் தேர்தல் சட்டவிரோதமானது எனக் கூறி அவசரச் சட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மனு செய்திருந்தார்.

 

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,
மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம்  சட்டவிரோதமானதல்லஎன்று கூறி திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

இதற்கிடையே, ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon