மு.க ஸ்டாலினுக்கு புல்லட் புரூப் கார் அனுப்புகிறாரா பிரதமர் மோடி..?
தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார். சந்திப்பின்போது நீட்தேர்வு எய்ட்ஸ் மருத்துவமனை உட்பட 35 முதன்மையான விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் பேசவிருக்கிறார்.
3 நாள் பயணமாக டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின் அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். பிரதமருடனான சந்திப்பு அரசியலோ, தனிப்பட்ட முறையிலோ இருக்கலாம். தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்த நிலையில் திமுக அரசுடன் சுமுகமான உறவை மோடி கடைபிடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மு க ஸ்டாலினை அழைத்துவர குண்டு துளைக்காத புல்லட் புரூப் காரை மோடி அனுப்புகிறார்.






