--- --:--:-- --

தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு..!

3

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையும் சேலம், தர்மபுரி, நாமக்கல், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Right Menu Icon