தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பில் இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
9ஆம் தேதியன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழையும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதினோராம் தேதி இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழையும் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் இரண்டாம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.






