--- --:--:-- --

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!

2

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பத்தாம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்க கடலில் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இதனால் 8, 9 ஆகிய நாட்களில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நவம்பர் 11ஆம் தேதி சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, குமரி கடல் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளி வீசப்படும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றன.

 

Right Menu Icon