--- --:--:-- --

உயிர் தப்பிய மத்திய அமைச்சர்..!

3

த்திரபிரதேசத்தில் பலத்த காற்று வீசியதில் இரும்புக் கம்பி ஒன்று மேடை மீது சரிந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். உத்திர பிரதேச மாநிலத்தின் வேம் நகர் பகுதியில் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பலத்த காற்று வீசியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேடையில் கம்பி சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

 

Right Menu Icon