காவிரி விவகாரம் : டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி பாசனத்தில் உள்ள நெடுவாசல், கீரமங்கலம், கரம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் உடனடியாக கர்நாடகா உரிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரியில் தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் காவிரி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக 20,000க்கும் மேற்பட்ட கடைகளும் 4,000க்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்பட்டன .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





