ஆயிரம் கோடி வரை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது! 3000 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வராக்கடனை வசூல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 300 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அந்த முன்னூறு பொதுத்துறை வங்கிகள் நேற்றும், இன்றும் செயல்படவில்லை.மிகப்பெரும் தொழில் நகரமாகிய சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் பண பரிவர்த்தனையை கொண்டது.
வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக நேற்றும், இன்றும் பணப்பரிவர்த்தனைக்காக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நாளை விடுமுறை நாள் என்பதால்,நாளையும் வங்கிகள் செயல்படாது.இதனால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.






