--- --:--:-- --

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!

6

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பெண்கள் காயம் அடைந்தனர். விழுப்புரத்தில் இருந்து 36 பெண் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக டூரிஸ்ட் பேருந்தில் கடந்த 23ஆம் தேதி புறப்பட்டுள்ளனர்.

 

மேல்மருவத்தூர் ராமேஸ்வரம் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

குமாரபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையில் இடது புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon