--- --:--:-- --

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது!

2

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது. கோவையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் காரின் முன்புற பகுதி சேதமானது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கரூர் துயர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஹேமா மாலினி எம்.பி. தலைமையிலான குழுவினரை தேசிய ஜனநாயக் கூட்டணி குழு அமைத்துள்ளது. எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான குழு இன்று கோவை வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது, கரூர் சம்பவம் குறித்து 8 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து கோவையில் இருந்து கரூர் கிளம்பி சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழுவினரின் கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டது.

 

இதில் எம்.பி ஹேமா மாலினி பயணம் செய்த காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படாத நிலையில் ஹேமா மாலினி அதே காரில் புறப்பட்டு கரூர் சென்றார்.

Right Menu Icon