--- --:--:-- --

பீகார் சிறுமிகள் பலாத்கார வழக்கு: முன்னாள் MLA உள்பட 19பேர் குற்றவாளிகள்

3

பீகார் மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ உட்பட 19 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதி உதவியுடன் கூடிய ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது.

 

இந்த காப்பகத்தை பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரஜேஷ் தாக்கூர் என்பவர் நடத்தி வந்தார். காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த டெல்லி சாகித் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சௌரா குல்சுரேஷ்தா, பிரஜிஸ்தாகூர் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகள் என்பதை அறிவித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

Leave a Reply

Right Menu Icon