திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்ல தடை
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை மற்றும் நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.





