நடுவானில் இறந்த பச்சிளம் குழந்தை..!
மொரீஷுயஸில் இருந்து இதய சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை நடுவானில் உயிரிழந்துள்ளது. மொரீஷியஸை சேர்ந்த குமார்-பூஜா தம்பதிக்கு 8 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். ஆனால் நடுவானில் இருக்கும்போதே குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.





