--- --:--:-- --

மருமகன் திட்டியதால், மனமுடைந்த மாமனார் மாமியார் விஷமருந்தி தற்கொலை முயற்சி..!

3

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மருமகன் திட்டியதால் மனமுடைந்த மாமனார் மாமியார் விஷம் அருந்திய நிலையில் மாமியார் உயிரிழந்தார். மாப்பிள்ளை கவுண்டர் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன், சத்யப்ரியா.

 

இவர்களின் ஆறு வயது மகன் நீண்ட நேரம் டிவி பார்த்ததால் தமிழ்ச்செல்வன் , மனைவி சத்யபிரியாவை கண்டித்துள்ளார். பிரியாவின் தாய் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எங்கள் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என மாமியார் மரகதத்தை தமிழ்ச்செல்வன் கண்டித்தார் என்று கூறப்படுகிறது. அதை பிரியாவின் தாய் கணவரான தண்டபாணியிடம் கூறி வேதனை அடைந்துள்ளாராம்.

 

இதனால் மனமுடைந்த இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாமியார் உயிரிழந்து விடவே தண்டபாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon