ஷாருக் கான் காலில் விழுந்த அட்லீ.. விருது விழா வீடியோ படுவைரல்..!
ஜவான் என்ற மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்ததால் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல டாப் ஹீரோக்கள் வெயிட்டிங்.
அட்லீ அடுத்து தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை இயக்க போகிறார். அதற்கு சம்பளமாக அவர் 60 கோடி ரூபாய் வாங்குகிறார் எனவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்று நடந்த ஜீ சினி விருதுகள் விழாவில் அட்லீ அவரது மனைவி உடன் கலந்துகொண்டார். மேலும் ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டதும் அட்லீ எழுந்து ஷாருக் கானின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றுவிட்டு அதன் பின் மேடை ஏறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





