ரயில் கழிவறை சுத்தம் இல்லாததால் வாக்குவாதம்..!
கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கழிப்பறை சுத்தம் இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயில் பணியால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய இன்டர்சிட்டி அதிவிரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் பிரஷாந்த் என்ற ரயில் பயணி பயணித்துள்ளார்.
அந்த ரயிலில் கழிவறை சுத்தம் இல்லை எனக்கூறி சேலம் ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பயணிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.
உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள் நான்குமணி நேரமாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெட்டியில் உள்ள அனைவரும் தவித்து வருவதாகவும் இது குறித்து பலமுறை ரயில்வே துறைக்கு புகார் கொடுத்தும் எந்த ரயில் நிலையத்திலும் இதற்கான தீர்வு கிடைக்காததால் இதுபோன்ற செயல் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






