--- --:--:-- --

நாடு முழுவதும் 3 நாட்கள் ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா..?

2

ந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, 3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் இயங்காது என பரவிய தகவல் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இது தொடர்பான செய்தி வேகமாக பரவி வருகிறது.

 

அதில், பாகிஸ்தான் ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்துவதால் 2-3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வாயிலாக எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்றும், DANCE OF THE HILLARY என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோவை திறக்க வேண்டாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தி பொய்யானது என்றும், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரிபார்க்கப்படாத வாட்ஸ்ஆப் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Right Menu Icon