இந்தியா – கனடா உறவில் மேலும் ஒரு சிக்கல்..!
இந்தியாவிலிருந்த கூடுதல் தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்ப பெற்றுள்ளது. இருநாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹரிதீப் சிங் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியதில் இருந்து இந்தியா, கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையில் சமநிலையை கடைபிடிக்க கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தி இருந்தது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து கூடுதல் தூதரக அதிகாரிகள் 41 பேரை மலேசியா சிங்கப்பூருக்கு இடமாற்றி கன்னட அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியான சிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





