--- --:--:-- --

திட்டமிட்டே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை..!

7

மிழக பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை, தேர்தல் பொறுப்புகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். தனது தந்தையின் உடல்நலத்தைக் காரணம் காட்டி, கோயம்புத்தூரிலேயே தங்கியிருக்கப் போவதாக அவர் கூறியிருப்பது தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்ணாமலை கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என இருதரப்பையும் ஊழல் புகார்களால் திணறடித்தவர். பாஜகவே இல்லாத இடங்களில் கூட அக்கட்சியின் பெயரை ஒலிக்கச் செய்தவர்.

 

ஆனால், கூட்டணி உறுதியான பிறகு அவரது குரல் மெல்ல அடங்கியது. தற்போது ஆறு தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராகக் குறைக்கப்பட்டது, அவரைத் திட்டமிட்டே ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.

 

Right Menu Icon