அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு..!
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது தரப்பு மறுத்துள்ளது. இந்நிலையில், கோர்ட் நாளை(மே 28) தீர்ப்பளிக்கிறது. ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வருமா?





