என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல் அன்புமணி செயல்படுகிறார் – ராமதாஸ்
ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன என்று அன்புமணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. சமீபத்த்தில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று கூறப்பட்டது.
அண்மையில் ராமதாஸ் சென்னை வந்த போதும் அன்புமணியை சந்திக்காமல் சென்றார். இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்புமணி உடனான பேச்சுவாரத்தை டிராவில் முடிவடைந்தது. அதற்கு முன்பாக 16 பஞ்சாயத்து நடந்தது. நான் தொடங்கியது 34அமைப்புகளை சேர்ந்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தார்கள். அதை தலைவிதி என ஏற்றுக்கொண்டேன்.
பஞ்சாயத்து செய்த அனைவரும் ஒரே விதமான தீர்ப்பை சொன்னார்கள். என்ன தீர்ப்பு என்றால் நான் இங்கே இருந்துக் கொண்டு கட்சி வளர்ப்பது, அவர் வெளியே சென்று கட்சி வளர்ப்பது என்ற தீர்ப்புதான்.அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கறினேன். மாநாட்டிற்கு முன்பாக அன்புமணி பார்த்துவிட்டு வாருங்கள், தலைவர் பதவியை விட்டுத்தருகிறேன் என கெளரவ தலைவரை அனுப்பினேன்.
மாநாடு மேட்டையிலேயே கையெழுத்து போட்டுதர தயாராக இருப்பதாக கூறினேன் அதற்கும் ஏற்கவில்லை. அதனால் இயற்கையான கோபம் வந்து நீயா, நானா பார்த்துவிடுகிறேன் என வந்துவிட்டேன்.மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, என்னை மானபங்கம் செய்தார். அதிகாலை 3 மணி வரை நிர்வாகிகளிடம் தொலைப்பேசியில் பேசி போகாதே என சொல்லியுள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை எடுக்கப்போகிறார் என பொய்யான தகவலை சொல்லியுள்ளார்.
இதனை மூர்கன், மூடன் தான் செய்வான்.
குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய பிள்ளை இருக்கக்கூடாது. இதுவே தர்மம். இதுவே சார்ஸ்த்திர சம்பிரதாயம் ஆகும். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவ படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என தெரிவித்தார்.






