--- --:--:-- --

அரசியல்வாதி என்ற தகுதி இல்லை – அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்

2

டந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரின் தந்தை ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய ராமதாஸ், அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே கட்சித் தலைவர் என்றும் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அன்புமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.

 

இரண்டாம் முறையாக நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய ராமதாஸ், “இன்று ஒரு முக்கிய செய்தியை சொல்லப் போகிறேன். பாமகவின் 01-09-25 தேதியிட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் கட்சி தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு இது.

 

பாமகவின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைந்த 16 குற்றச்சாட்டுகளுக்கு 19-08-25 அன்று அளித்த கடிதத்திற்கும், இரண்டு முறை கடிதம் அளித்தும், நேரில் வந்தும், கடிதம் மூலமாக அளிக்காமல், குற்றச்சாட்டுக்கு எந்த பதில் அளிக்க எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் 16 குற்றச்சாட்டுகளுக்கு தான் செய்த தவறுகள் என்று ஒப்புக்கொண்டுள்ளார் என்ற அனுமானம் இருப்பதாக ஒப்புக்கொண்டதாக ஏற்று, குற்றச்சாட்டுகள் உண்மையானவையே, சரியானவையே என முடிவு செய்யப்படுகிறது.

 

கட்சி ஆரம்பித்த நாள் முதல் தலைமைக்கு கட்டுப்படாமல் தாந்தோன்றி தனமான செயல், அரசியல்வாதி என்ற தகுதி இல்லை என்பதால் பாமகவின் அனைத்து தரப்பு நிர்வாகிகள் மனம் புண்படும் செயல்பட்டது கட்சி விரோத நடவடிக்கை என முடிவு செய்து அன்புமணியை பாமகவில் செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அன்புமணி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.

 

Right Menu Icon