ஜூன் மாத பள்ளிகள் திறப்பு குறித்து அன்பில் மகேஷ் விளக்கம்..!
தமிழகத்தில் ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையினருக்கு ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி சற்று தள்ளி வைக்க கோரிக்கை எழுந்தது. இதைப்பற்றி முதலமைச்சருடன் ஆலோசிப்பதாக கூறியிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
திருச்சியில் செய்தியாளரிடம் பேசியவர் ஜூன் மாதம் ஐந்தாம் தேதிக்குப் பின் வெப்பம் குறையும் என்று வானிலை மையம் கூறி இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் கோடை விடுமுறை காலத்தில் வகுப்புகள் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





