நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை..உயிரிழந்த ஆனந்தன்..!
சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நபர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் நெஞ்சுவலி காரணமாக கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் தவறான சிகிச்சை எடுத்ததால் தான் அனந்தன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூடக்கோரி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.






