--- --:--:-- --

இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் உயிரிழப்பு..!

6

ராசிபுரம் அருகே இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

முத்து என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயக்குமாருக்கும் சொத்து தகராறு தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முத்து வீட்டிற்கு செல்லும் தனியார் பாதையை ஜெயக்குமார் கற்களைக் கொட்டி மறுத்ததாக கூறப்படுகிறது.

 

75 வயதான முத்துவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீட்டில் தனியாக இருந்த அவரது பேத்தி 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். வழியை மறைத்து போடப்பட்டிருந்த கற்களை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அகற்ற முயன்ற பொழுது ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முத்துவை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 

Right Menu Icon