அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட், சூலூர்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குளித்துறை ஆகிய 9 ரயில்கள் இன்று திறக்கப்படுகின்றன.
டிஜிட்டல் அடையாள போா்டுகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி, சுமை பரிசோதனை இயந்திரங்கள், முக்கிய பிரமுகா்கள் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், அழகிய மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இலவச மற்றும் கட்டண வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சாலை வசதி, வாகன நிறுத்தகம், புதிதாக பயணச் சீட்டு வழங்கும் அறைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், சுகாதார வளாகம் சீரமைக்கப்படுகிறது. பயணிகள் இருக்கை வசதி, தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நீட்டிக்கப்பட்ட மேற்கூரை வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.






