--- --:--:-- --

ஈரோடு – பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில்..!

4

ரோடு – பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே வாராந்திர அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து 25-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த 3-வது நாள் மாலை 7-க்கு பீகார் மாநிலம் ஜோக்பானியை சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில் ஜோக்பானியில் இருந்து 28-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (16602), அடுத்த 4-வது நாள் காலை 7.20 மணிக்கு ஈரோட்டினை வந்தடையும். இந்த அம்ரித் பாரத் வாராந்திர ரயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Right Menu Icon