--- --:--:-- --

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்..தற்கொலை செய்து கொண்ட மனைவி..!

8

காரைக்கால் கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் செவிலியரின் மனைவி பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. காரைக்கால் திருப்பதூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

 

இவரது மனைவி சுகாதார நிலையத்தில் அரசு செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அருண்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த மனைவி தனது தாயார் வைத்திருந்த பிபி மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். இதனால் இரவு வாந்தி எடுத்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

அங்குள்ள மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் இருந்து ஓட்டுநர் இல்லாததால் 3 மணி நேரம் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள சிவரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆம்புலன்ஸ் தாமதமானதால் சிவரஞ்சனி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon