--- --:--:-- --

ரேசிங் மைதானத்தில் ஷாலினியிடம் அன்பைப் பொழிந்த அஜித்..!

3

ரேசிங்கிற்கு செல்லும் முன் மனைவி ஷாலினிக்கு நடிகர் அஜித் முத்தமிடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நடிகர் அஜித் குமார், கார் பந்தய அணி ஒன்றைத் தொடங்கி உலகெங்கும் பயணம் செய்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அஜித், தன் வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்றான கார் ரேசில் பங்கேற்று வருகிறார்.

 

தற்போது மலேசியாவில் நடைபெறும் ஏஷியன் லீமென்ஸ் சீரிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இதனால், மலேசியா செல்லும் பிரபலங்கள், அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.முன்னதாக, சனிக்கிழமை நடந்த போட்டியில், காரில் ரேடியேட்டர் பழுதானதால் அஜித்தால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

 

இந்நிலையில் ரேசிங்கிற்கு செல்லும் முன் தனது மனைவி ஷாலினியுடன் சில நொடிகள் பேசிய அஜித், போட்டியில் பங்கேற்க விடைபெறும்போது அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.கார் பந்தயத்தில் பங்கேற்கும் முன்பு மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்கிடம் வாஞ்சையுடன் பாசப்பெருக்கை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகளை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Right Menu Icon