--- --:--:-- --

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது..!

4

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்டகளை ஏற்கனவே அறிவித்துள்ள அதிமுக அந்த கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் , அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் மற்றும் கூட்டணி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதற்கு முந்தைய நாள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon