கள்ளக்காதல்! தாயின் தவறான உறவால் 4 வயது சிறுவன் பலி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணி பிரகாஷ், தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தார். எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வரும் அந்தோணி பிரகாஷ் மாதத்தில் 15 நாட்கள் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் சுய உதவி குழுவில் இணைந்து கடன் பெற்றுள்ளார் தீபா. இந்த கடன் தொகையை வசூலிக்க சொரிமுத்து என்பவர் தீபா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கம் வீட்டார்கள் கொடுத்த தகவலின் மூலம் தங்களது 4 வயது மகனுடன் வீடியோ காலில் பேசியபோதும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அந்தோணி பிரகாஷுக்கு தெரியவந்துள்ளது.
தீபாவை அவர் பலமுறை கண்டித்தும் அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு சொரிமுத்து உடன் தீபா தனது மகனுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றுள்ளார். தீபா மட்டும் கோவிலுக்குள் சென்ற சமயத்தில் அந்தோணி பிரகாஷ் செல்போனில் அழைத்துள்ளார்.
அப்போது செல்போனை வைத்து இருந்த சிறுவன் லோகேஷ் அழைப்பை எடுத்து தந்தையிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். தந்தை எங்கு இருக்கிறாய் என கேட்க ஒரு மாமாவுடன் நானும் அம்மாவும் கோவிலுக்கு வந்துள்ளதாக தெரிவித்ததோடு சொரிமுத்து நிற்கும் திசையை நோக்கி செல்போனை திருப்பியும் காட்டியுள்ளான்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த சொரிமுத்து செல்போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்ததோடு
சிறுவனை கடுமையாக தாக்கி கீழே தள்ளி கழுத்தில் மிதித்து உள்ளார். மேலும் சிறுவனின் தலையை பிடித்து அருகில் இருக்கும் சுவற்றில் பலமாக முட்ட வைத்துள்ளார். இதில் சிறுவன் மயங்கி உள்ளான். இதனை கோவிலிலிருந்து வெளியே வந்த தீபா பார்த்து அதிர்ந்து உள்ளார்.
அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் லோகேஷ் எவ்வித பலனும் இன்றி ஞாயிறு காலை உயிரிழந்தான். தகவலறிந்த அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சொரிமுத்து தாக்க முயன்றவர்களை சமாளித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் முதல் மகனை கள்ளக்காதலன் தாக்கியது வரை அனைத்து விபரங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தப்பியோடிய சொரிமுத்துவை தேடி வந்த போலீசார் தற்போது அவனை கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




