பெண் காவலரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய சக காவலர்
விழுப்புரம் அருகே பெண் காவலரை காதலித்து ஏமாற்றிய சக காவலரை போலீஸார் கைது செய்தனர். ரயில்வே போலீசில் காவலராக பணிபுரிந்து வரும் கருங்காலிப்பட்டை சேர்ந்த சரத்குமார் என்பவரும், சிறைத் துறையில் காவலராக பணிபுரியும் பிரியங்காவும் ஆயுதப்படை பிரிவில் ஒன்றாக பணி புரிந்தபோது காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் பிரியங்கா கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரத்குமார் வேறொரு பெண்ணை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்து நேரில் சென்று நியாயம் கேட்ட பிரியங்காவை, சரத்குமாரும் அவரது குடும்பத்தினரும் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சரத்குமாரை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த கீதா என்ற பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




