--- --:--:-- --

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

liho

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் நோக்கி புறப்பட்ட முதலமைச்சர்  பழனிச்சாமிக்கு அவிநாசி நாற்கர சாலை எல்லையில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அதி.மு.க மற்றும் அவினாசி ஒன்றியம் கழகம் சார்பில் சரியாக 3.30 மணிக்கு பாண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், குணசேகரன்,பல்லடம் நடராஜன், அவிநாசி ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்பிரமணியம், சேவூர் வேலுச்சாமி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் லதாசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல்,மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதவர் எடப்பாடியை வரவேற்றனர். விழாவில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அவிநாசி தாசில்தார் சாந்தி, மாவட்ட ஊராட்சி துணைச் சேர்மன் சிவகாமி சுப்பிரமணியம், முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்,  பட்டுலிங்கம், பூலுவப்பட்டி பாலு, பூபதி, பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, ஏ.ஆர்.கே. கார்த்திகேயன், ஷாஜகான் உள்பட அ.திமுக நிர்வாகிகள்  திரளாக கலந்துகொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும், கைகொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் முத்தாய்ப்பாக ஒரு வயதான பெண்மனி மேடைக்கு வர முயற்சி செய்ய, அதனை பார்த்த முதல்வா் பழனிசாமி, நானே வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி குனிந்து, அவரிடம் இருந்த சால்வையை பெற்றார். அப்போது அந்த மூதாட்டி எடப்பாடி பழனிசாமியை  வாயார வாழ்த்தி  புகழ்ந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon