--- --:--:-- --

‘விளம்பர’ மோகம் (ன்) காா்த்திக்! தன்னார்வலர் கூட்டம் மூலம் பள்ளிக்கு பப்ளிசிட்டி.. திருப்பூர் மேயர் பெயரை வைத்து அட்ராசிட்டி..!!

275195935_3189432441344454_5528936823201495936_n

திருப்பூர் மேயர் சொன்னதாகச் சொல்லி, சமூக சேவை அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தை தனது பள்ளி வளாகத்தில் நடத்தி, பள்ளிக்கு பப்ளிசிட்டி தேட முற்படுவதாக, தாமக பிரமுகர் மோகன் காா்த்திக் மீது தன்னார்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவதை, மேயர் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

 

திருப்பூர் நகர மேயராக, மக்கள் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த தினேஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார். புதிய மேயரை, திருப்பூரில் பிரபலங்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.

 

ஆனால், இதை வாய்ப்பாக பயன்படுத்தி, மேயரை வாழ்த்தும் சாக்கில், பொன்னாடை போர்த்தி தங்களது ஆதாயத்திற்கு, மேயரை சிலர் வளைக்க முற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக, திருப்பூர் தாமக பிரமுகரான மோகன் காா்த்திக்கின் நடவடிக்கையை, அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 

கிட்ஸ் கிளப் பள்ளியை நடத்தி வரும் மோகன் காா்த்திக், அன்புடன் திருப்பூர் என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி, கவனித்து வருகிறார். இதன் மூலம், தனக்கு வேண்டப்பட்ட தன்னார்வலர்களை கூடவை வைத்துக் கொண்டு, ஆங்காங்கே சமூக சேவைகளை செய்து வருகிறார். இது உண்மையிலேயே, மிகவும் பாராட்டுக்குரிய செயல். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில், தனக்கு வேண்டப்பட்ட சமூக ஆர்வலர்களை மட்டும் பாராட்டி குளிர்விக்கும் பொருட்டு, அனைத்து சமூக சேவை அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் என்ற பெயரில், நிகழ்ச்சிக்கு மோகன் காா்த்திக் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையும் குறை சொல்வதற்கில்லை.

 

ஆனால், தனக்கு வேண்டப்பட்ட சமூக ஆர்வலர்களில் ஒரு சாராரை மட்டும் பாராட்டி மகிழ, மாநகருக்கு பொதுவான மேயர் தினேஷ்குமாரை அவர் பயன்படுத்துவதுதான் நெருடலை ஏற்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

 

தன்னார்வலர்களை, அதிர்ச்சி

 

அண்மையில், மேயரை சந்தித்தபோது, இந்த கூட்டம் நடத்துவது குறித்த தனது விருப்பத்தை, மோகன் காா்த்திக் வெளியிட்டுள்ளார். தன்னலம் பாராமல் சமூக சேவை புரிவோரை பாராட்டுவதில் தவறில்லை. நிச்சயம் அதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று, மேயர் தினேஷ்குமாரும் கூறியுள்ளார்.

ஆனால், அதன் பிறகு மோகன் காா்த்திக் செய்த காரியங்கள் தான், விளம்பரமே செய்து கொள்ளாமல் சமூகப்பணிகளை செய்து வரும் தன்னார்வலர்களை, அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் சிலர், நமது “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் கூறியதாவது:

 

அரசியல் கட்சி பிரமுகரான மோகன் காா்த்திக், பள்ளியை நடத்தி வருகிறார். இவர் செய்யும் எந்த காரியத்திலும், தனது பள்ளியை முன்னிலைப்படுத்த தவறமாட்டார். அரசியல் பிரமுகராக இருந்து தன்னார்வச் சேவை புரிவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

 

அதே நேரம், தனக்கு வேண்டப்பட்ட குழுக்களை உருவாக்கி, அவர்களை மட்டுமே தன்னார்வலர்கள் என்று முன்னிலைப்படுத்தி, அவர்களை மட்டுமே அங்கீகரிக்க முற்படுகிறார். இதற்காக, மேயரை அழைத்து பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார். விளம்பரம் செய்து கொள்ளாமல், முக நூலில் படங்களை பதிவிடாமல், வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பலர் தொண்டாற்றி வருகிறோம். எங்களையெல்லாம், தன்னார்வலர்களாகக்கூட பலரும் கருதுவதில்லை.

 

மோகன் காா்த்திக், மேயரை சந்தித்தபோது, ஆலோசனை நடத்துவது பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். ஆனால், தனது சமூக வலைதள பதிவில், மேயர் அழைக்கிறார் என்று சொல்லிவிட்டு, மேயரே குறிப்பிடாத தனது பள்ளி வளாகத்தில், வரும் 20 ஆம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்… அவர் செய்யும் எந்த செயலிலும் தனது பள்ளியை, தொழிலை முன்னிலைப் படுத்தியே ஆதாயாம் பார்க்க முற்படுகிறார். தன்னார்வத் தொண்டு என்பது பொதுவான விஷயம். இதை பொதுவான இடத்தில் வைக்க வேண்டும். தனது தனியார் பள்ளியில் வைத்து கூட்டம் நடத்துவது எதற்காக? ஏன் திருப்பூரில் மாநகராட்சி பள்ளிகளே இல்லையா? எங்களை கவுரவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தனது பள்ளிக்கு விளம்பரம் தேட பார்க்கிறார். இதுதான் எங்களை வேதனையடைய வைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

தன்னார்வலர்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து அறிய, திருப்பூர் மேயர் தினேஷ்குமாரை, “குற்றம் குற்றமே” தரப்பில் அணுகி கருத்து கேட்டோம். மேயர் நம்மிடம் கூறுகையில், “சமூக ஆர்வலர்களை சிறப்பிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பற்றி மட்டுமே மோகன் கார்த்திக் தரப்பில் என்னிடம் பேசப்பட்டது. ஆனால், கிட்ஸ் கிளப் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று எதையும் நான் குறிப்பிடவில்லை” என்றார்.

 

திருப்பூர் மேயர் நமக்கு அளித்த பதிலின் மூலம், தன்னார்வலர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பது வெளிப்படையாக புலப்படுகிறது. மேயர் போன்ற உயர் பதவிகளில் இருப்போரை ‘காக்கா’ பிடித்து, காரியம் சாதிக்க பலரும் முற்படுவது இயல்புதான்.

 

அதற்காக, மேயர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள், சொல்லாத ஒன்றை சொன்னதாக சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து, அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்று. எனவே, தனக்கு ஆதாயம் தேட முற்படுவோரை, ஜால்ரா அடிப்பவர்களை, ஆரம்பத்திலேயே மேயர் அடையாளம் கண்டு, களைய வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Right Menu Icon