--- --:--:-- --

திருமணம் குறித்து வாய் திறந்து பேசிய நடிகை ரம்யா பாண்டியன்..!

13

டிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள், அவரை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக்கியது.

 

இதன்பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் டாப் 5ல் வந்தார். இதனை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்த ரம்யா, சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

 

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடிய நடிகை ரம்யா பாண்டியனிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் ” எனக்கானவரை நான் கண்டுபிடிக்கும்போது, அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். இப்போதைக்கு வாய்ப்பில்லை ” என்று கூறியுள்ளார்.

Right Menu Icon