--- --:--:-- --

சீரானது நடிகை ரைசாவின் முகம்..!

5

சீரான அழகு முகத்துடன் நடிகை ரைசா தனது புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். விளம்பரத்துறையில் மாடலாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்த நடிகை ரைசா வில்சன் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு தோல் சிகிச்சை மருத்துவர் பைரவி பேஷியல் செய்துள்ளார். அதன்பின் எதிர்பாராத விதமாக என் கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டது. தனது முகம் வீங்கி போனதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ரைசா.

 

அழகு கலை மருத்துவர் செய்த தவறால் இந்த விபரீதம் ஏற்பட்டதாகவும் அப்போது அவர் வெளியூர் சென்றிருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

 

இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூன்று நாட்களில் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் பைரவி ரைசாவுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் சீரான அழகு முகத்துடன் நடிகை தனது புகைப்படத்தை விடுவித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon