--- --:--:-- --

முக்கிய இடத்தில் அனுமதிக்கப்படாமல் ரோட்டிலேயே நிற்க வைக்கப்பட்ட நடிகை அமலாபால்..!

6

லையாள நடிகையான அமலாபால் தமிழில் சிந்து சமவெளி, மைனா, தலைவா, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

மலையாளம், தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வந்த இவர் 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் 3 ஆண்டுகளில் திருமணம் முடிவுக்கும் வந்தது. அதன்பின் அடுத்தடுத்து அமலாபால் நிறைய படங்கள் நடித்துவந்தாலும் பெரிய ரீச் இல்லை.

 

கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் வழக்கம் இருப்பதால் கிறிஸ்துவரான அமலாபால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

 

கோவிலுக்கு எதிர்புறம் உள்ள சாலையில் நின்று தரிசனம் செய்யும்படி அங்குள்ளவர்கள் தன்னை கூறியதாக அமலாபால் குற்றம்சாட்டி உள்ளார். 2023.ம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது இனியாவது இது மாறும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Right Menu Icon