நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்களால் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்படும் சீனிவாசன் கடந்த 2011ம் ஆண்டு வெளியான லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.
அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்த படம் நடித்தார். இதனையடுத்து அவர் காமெடி கதாபாத்திரங்களில் ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். காமெடி திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சினிமாவில் தனக்கென்று தனி பாணியை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






