உடல் நலம் சரியில்லாத மூதாட்டியை நடனமாட வைத்ததாக குற்றச்சாட்டு..!
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின பெண்ணான கமலா வலுக்கட்டாயமாக நடனமாட வைக்கப்பட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு விதைகளை பாதுகாப்பதற்காகவும் 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சமூக சேவகி ஒருவர் வலுக்கட்டாயமாக நடனமாட வைத்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
தான் முடியாது என மறுத்து உடல் நலம் சரியில்லாத தன்னை நடனமாட வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





