சென்னையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!
சென்னை – அண்ணாநகரில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கார்களில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் காரை இயக்கிய பிரசாந்த் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில் பெண் தோழியுடன் மது அருந்திய பிரசாந்த், காரை பின்பக்கம் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து என தெரியவந்துள்ளது.





