--- --:--:-- --

உணவு டெலிவரிக்காக குதிரையில் சவாரி செய்த இளைஞர்..!

3

லாரி ஓட்டுனர்கள் போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் குதிரையில் பயணம் செய்து உணவை டெலிவரி செய்துள்ளார்.

 

புதிய குற்றவியல் சட்டத்தில் உள்ள சில தண்டனை பிரிவுகளுக்கு எதிராக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

ஹைதராபாத்திலும் இதே நிலை நீடிக்க பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாற்று வழியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் குதிரையில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

 

நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அந்த இளைஞர் குதிரையில் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.

 

Right Menu Icon