--- --:--:-- --

ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்..!

5

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்கள் ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரையின் மனைவி வெண்ணிலாவிற்கு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் அவரிடம் இருந்த பெண் ஒருவர் குழந்தையை எடுத்து கொஞ்சினார்.

 

பின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. டாக்டரிடம் காட்டிவிட்டு வருகிறேன் என்று கூறி எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் அவர் திரும்பாததால் போலீசில் புகார் செய்யப்பட்டது. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon