--- --:--:-- --

மனைவி கணவரிடம் பணம் கேட்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

10

ம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண் வேலைக்கு மட்டும் செல்லாமல் குடும்ப பராமரிப்பு செலவை கணவரிடம் கேட்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

டெல்லியை சேர்ந்த நபர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப பராமரிப்பு செலவாக மாதம் தோறும் மனைவிக்கு 21,000 வழங்க வந்தார். இந்த நிலையில் பராமரிப்பு செலவை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தனது மனைவி 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் என்றும், பராமரிப்பு செலவை உயர்த்தி வழங்க கோரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணையில் சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண் வேலைக்கு செல்லாமல் குடும்ப பராமரிப்பு செலவை கணவரிடம் கேட்க முடியாது என்று உத்தரவிட்டது.

 

Right Menu Icon