தண்டவாளத்தின் குறுக்கே சென்ற மாடு மீது ரயில் மோதி விபத்து..!
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மாடு மோதியதில் ரயில் பயணிக்கு தாமதம் ஏற்பட்டது. அரக்கோணம் நோக்கி திருமாவூர் வழித்தடத்தில் மின்சார ரயிலில் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கரும்பூர் அருகே ரயில் வந்த பொழுது தண்டவாளத்தின் குறுக்கே சென்ற மாடு மீது ரயில் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில் பெட்டியின் அருகில் மாடு சிக்கியது. தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் ரயில்வே பணியாளர்கள் உதவியுடன் மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





