--- --:--:-- --

மூன்று மாத கர்ப்பிணி மீது ஏறி இறங்கிய லாரி..!

6

மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று மாத கர்ப்பிணி கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார் .

 

நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஜித் – ஐஸ்வர்யா தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் ஐஸ்வர்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை இரும்பு சேகரிப்பு வேலையை முடித்துவிட்டு இருவரும் டிவிஎஸ் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது சாம்பல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஸ்கூட்டரின் மீது மோதியதில் ஐஸ்வர்யா உடல் நசுங்கி பலியானார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பியோட முயன்ற லாரி டிரைவரை மடக்க பிடித்து கைது செய்தனர். கால் முறிந்த அஜித்துக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon